Sunday, April 19, 2015

அத்தியாயம் 12 - பக்தி யோகம்

 


பக்தித் தொண்டு
1
பக்திகொள்வது தொண்டுசெய்வது என்றுசொல்லுகிற பாதையா
ப்ரம்மம்சூக்குமம் என்றுஅருவமாய் கொண்டுசெய்யுகிற பூஜையா
இந்தஇரண்டினில் எதுசிறந்தது ஒன்றைமட்டும்நீ கூறைய்யா
நல்லபக்குவம் கொடுக்கும்சூக்குமம் எதனில்உண்டுசொல் கன்னையா
 
2
எனதுதெய்வுரு தன்னைமனதினில் நிறுத்திநம்பிக்கைக் கொண்டுமே
என்னைவழிபடும் அன்புசெய்திடும் எவனும்பக்குவம் கொண்டவன்    
 
3-4
புலனைக்கடந்துபே ரண்டமெங்கணும் நிறைந்தபேரலை சிந்தனை
கடந்துநிலைத்ததை எங்கும்நிறைந்ததை உண்மையான அருத்தன்மையை
அசைவிலாதபெரும் விசையுமானதைக் கொண்டுபூசையைச் செய்பவர்
மனதில்சமதையைப் பெற்றுஉயிர்தயை கொண்டுசேவையைச் செய்துபின்
கண்டஅமைதியில் கொண்டசக்தியில் மனதும்சித்தமும் கழலவே
பின்சமாதியில் என்னைஇறுதியில் வந்துசேர்கிறார் மெல்லவே
 
5
பரமன்தன்னிடம் நின்றுதோன்றிடா அருவத்தன்மையைப் பற்றியே
வாழ்ந்துவருபவர் முன்னில்செல்வது கடினமாகும்என அறிந்திடு
 
6,7
என்னைமனதினில் கொண்டுஅர்ச்சுனா எந்தபொழுதிலும் என்னையே
த்யானம்செய்பவன் பக்தித்தொண்டிலே ஈடுபாடுமிகக் கொண்டவன்
தன்னைப்போற்றிட பிறப்பிறப்பெனும் சுழற்ச்சி யின்றவனைக்காத்திட
காத்திருக்கிறேன் தொழிலதென்றென ஒன்றுமட்டுமே கொண்டுளேன்
 
8
எந்தன்மீதிலே மனதைநிறுத்திஉன் அறிவுமுழுதையும் என்னிலே
நிறுத்திகர்மம்செய் பொருந்திசொல்லைக்கேள் வருந்திடதேஎன் பார்த்தனே
பின்புஎன்னிடம் நின்றுவாழுவாய் ஐயம்சிறிதுமில்லை இதனிலே 
 
9
எந்தன் மீது உன்மனம் நிற்கவில்லை என்றிடில்
பக்தியோக முயற்சியில் முனைந்துஒழுக்க நெறிகளை
சக்திகொண்டு ஏற்றிடு பக்குவமாய் ஆயிடு
என்னைஅடையும் ஆசையை விருத்திசெய்ய முயன்றிடு 
Service : 12:10 - Do my work , I will do yours 12:10
பக்தியோக முயற்சியும் இயலவில்லை என்றிடில்
எனக்குமட்டும் என்பதாய் செயல்கள் செய்ய முயன்றிடு
சத்தியத்தின் மொழிகளில் பற்றுவைத்து அன்புசார்
சேவைசெய்து வாழ்வதால் பக்குவமாய் ஆகிறாய் 
 
11
அதுவும்-இயல வில்லையா கவலை-வேண்டாம் எழுந்திரு
செயலை செய்யும்போதிலே சேவை-எண்ணம் கொண்டிடு
செய்யும்-செயல்கள் அனைத்திலும் பலனை-மட்டும் துறந்திடு
த்யாகம் தன்னைக் கொண்டுநீ ஆன்மதாகம் பெருக்கிடு
 
12,13,14
எதுவும்-முடிய வில்லையே என்றுநீ நினைத்திடில்
உனதுமூளை தன்னையே அறிவைப்பெருக்கப் பணித்திடு
தியானம்-அறிவிற்ச் சிறந்தது த்யாகம் அதற்கும் பெரியது
த்யாகம்-கொண்ட மனத்தினோடு அன்புகொண்ட நெஞ்சினோடு
செய்யும்சேவை ஒன்றினோடு ஒத்துநோக்க இவைகள்-யாவும்
குறைந்ததென்று உணர்ந்திடு புரிந்துநீயும் செயல்படு
 
Bakthi lakshanam:12:15
பிறரைத்துன்பம் செய்திடா கவலை-தன்னில் மருகிடா
இன்பதுன்பம் தன்னிலே நடுவின்-நிலை குலைந்திடா
திருக்கும்-மனிதன் ஒருவனே எனக்குப்-பிரியன் அறிந்திடு
 
16
செயல்கள்-தன்னின் நடப்பினை மட்டும்-நம்பி வாழ்ந்திடா
திருக்கும் தூய்மையானவன் திறமைகொண்ட மேன்மகன்
கவலையற்ற ஒருவன்-மற்றும் துன்பப்பிடியின் தன்னிலிருந்து
விடுப்பு-பெற்று பலனை-விட்டு இருக்கும்-பக்தன்  எனக்குப்-பிரியன்
 
17
இன்பதுன்பம் இரண்டுமே பாதித்திடா திருந்துபின்
கவலைதனின் கோரப்பிடி தன்னில்சிக்கி டாதுபின்
சுபஅசுப விஷயத்தைத் துறந்து பக்திசெய்பவன்
எனக்கு-மிகவும் பிரியனாம் காணவொண்ணா அரியனாம்
 
18,19
நண்பர்-மற்றும் எதிரியோ மான-அவ மானமோ
தாங்கும்இடக் கவலையோ  அற்றுஅமைதி கொண்டுபின்
வெப்பம்-குளிர் இரண்டிலும் புகழ்ச்சி-இகழ்ச்சி இரண்டிலும்
நடுநிலைமை கொண்டு-நல் அறிவில்-நிலை பெற்றுநல்
பக்தி சேவை புரிபவன் எனது ப்ரீதிக்குரியவன்
 
20 (Help ever – Hurt Never)
பக்தி-கொண்ட நெஞ்சிலே அன்புசேவை புரிபவன்
சக்தியற்ற பிறவுயிர் தன்னின்-துன்பம் துடைப்பவன்
உதவிசெய்யும் உணர்வோடும் துன்பம்செய்யாப் மாண்போடும்
என்னை-நினைக்கும் ஒருமகன் எனதுஅன்புத் திருமகன்

---------------


 

No comments:

Post a Comment