Thursday, October 30, 2014

அத்தியாயம் 8 - அக்ஷர ப்ரம்ம யோகம்






 
பரம பதத்தை அடைதல்
1-10
இதனைக்கேட்ட அருச்சுனன் கேள்விபல எழுப்பினான்
கேள்விமூலம் நமதுமனதில் ஒளியைக்கூட்ட உதவினான்
கேள்விஎன்பதில்லை என்றால் பதிலும்தெளிவும் ஏதடா
யார்நான் என்றகேள்வி ஒன்றே பெரியவேள்வி தானடா

மனதைத்திருடும் மாதவா தெளிவைஅருளும் ஆதவா
பிரமம்என்ப தென்னது ஆத்மம்என்ப தென்னது
பலனளிக்கும் செயலெதிந்த ஜடத்தின்தோற்றம் யாதது
தேவர்களும் யாவராம் சொல்லிடுஜ னார்தனா

யாகங்களின் இறைவன்உடலில் எங்கெவ்வாறு றைகிறான்
அன்புத் தொண்டில் நிலைக்கும் மாந்தர்
நினைவு பிறழும் மரணத் தருணம்
தன்னிலும்மை எப்படித்தான் அறிகிறார்

கேள்வியங்கு பிறந்தது கண்ணன் வாயும் மொழிந்தது
அழிவுஅற்ற ஜீவ-ஆன்மம் ஆகும்பர பிரமமாய்
நித்யமான அதன்இயல்பு ஆன்மமென்றே ஆகுது
ஜடஉடலின் பலன்விளையும் செயல்கள்கர்மம் ஆகுது
ஸ்தூலமான இயற்கைஎன்றும் மாற்றம்கொண்ட தோற்றமே

நித்தியமான பரமபுருஷன் விஸ்வரூபம் அகிலமே
சத்தியமாக உடல்ஒவ்வொன்றின் இதயத்திலும் ஆன்மமாய்
இருக்கும் சாட்சி பூதம் நான்
 
என்னைமட்டும் நினைத்துஇந்த உடலைத்துறக்கும் மானிடன்
என்நிலையே அடைகிறான் என்னுடனே இருக்கிறான்
உடலைத்துறக்கும் தருணம்எண்ணும் நிலையை அவனும் அடைகிறான்



ஆதலினால் அருச்சுனா ..!
என்னை நினைத்துநீ கடமையைச் செய்திடு
உற்சாகம் கொண்டிடு போரிடு போரிடு

பலன்களை விட்டிடு கடமையைப் புரிந்திடு
உன்மனம் அறிவினை என்னிடம் நிறுத்திடில்
என்னையே சேர்கிறாய் என்னுடன் உறைகிறாய்

சிதம்தனில் பரம்பொருள் தனைத் தினம் நினைத்தவன்
உரம்படும் மனத்தினில் முயன்றிருக்கும் சாதகன்
ஐயமின்றி என்னையே வந்தடைவான் திண்ணமே

சிறந்தபரம புருஷனை , யாதறிந்த ஒருவனாய்
ஆதியான புருஷனாய் எதற்குமதி காரியாய்
 
அணுவிற்சிறிய அணுவுமாய் அனைத்தின் அரசனரசனாய்
உணர்தர்க்கரிய பொருளுமாய் எண்ணம்கடந்த அருளுமாய்
மனிதஉருவப் புருடனாய் மாயம்கடந்த ஒருவனாய்
ஒளிர்ந்தஜோதி வடிவமாய் த்யானம்செய்ய வேண்டுமாம்

8:11-20
உயிர்பிரியும் தருணம்தனில் உயிர்மூச்சை புருவம்தனில்
நடுவிருத்தி பக்தியுடன் பரமத்யானம் செய்யும்யோகி
பரமனையே அடைகிறான் பரமனாகி நிறைகிறான்
 
வேதமோதும் நல்லவரோம் காரமோது முத்தமர்
துறவுகொள் தபோதனர் போன்றஇந்த யாவரும்
இறையின்பரம பதத்தினில் சேர்ந்துநிறைவு கொள்கிறார்
இதனைவேண்டிப் பக்குவம் கொள்ளவேண்டி சாதகன்
பெண்ணின் உறவுதள்ளியே முயன்றுயோகம் செய்வதால்
முக்திநிலையைக் கோரலாம் சத்தியத்தைச் சேரலாம்

புலனில்இருந்து விடுதலை யோகமிருக்கும் பெருநிலை
புலனின்கதவை அடைத்துப்பின் மனதைஇதயக் கூட்டிலும்
மூச்சைஉச்சித் தட்டிலும் வைத்துயோகம் கொள்கிறான்
சாட்சிபூதம் ஆட்சிதன்னை யோகிஅறிந்து கொள்கிறான்

இந்தயோகம் நிலைத்தபின் சிறந்தப்ரணவம் சொல்லிப்பின்
பரமன்நினைவைக் கொண்டுபின் உடலின்உயிரை நீத்தபின்
ஒன்றிலொன்று ஆனபின் ஆன்மம்தன்னை கண்டபின்
என்றுமுள்ள ஆதியாக என்னவேண்டும் வாழப்பின்

பக்தியோகம் கொள்பவன் அன்புசேவை புரிபவன்
நித்தியத்தில் சத்தியத்தின் நினைவுநெஞ்சில் கொள்பவன்
என்னைவந்துச் சுலபமாக அடையும்வழியை அடைபவன்

பக்தியோகம் கொண்டமாந்தர் சத்தியத்தில் நின்றவேந்தர்
செத்திருக்கத் தேவையில்லை புத்திகெட்டு பிறப்பதில்லை
ஜடஉலகம் யாவையுமே இன்பதுன்பம் கொண்டவையே
பரமனடி சேர்ந்தவனோ பிறந்துலகம் சேர்வதில்லை
 
17
யுகங்கள் தன்னின் ஆயிரம் பிரமன்பக லாயிரும்
இரவும்யுகம் ஆராயிரம் கொண்டதாகும் அவனிடம்
பிரமப்பகல் என்பது சத்யத்ரேத த்வாபரகலி
ஆயிரத்தைக் கொண்டது ஆஹா என்றுஆவது


17.1
கோடிபதி னேழுலட்ச ஆண்டினோடு ஆயிரம்
இருபத்தெட்டு சேர்ந்துதான் சத்யயுகம் ஆகுதாம்
முதலில்வந்த யுகமிதனில் அழுக்கு சேரவில்லையாம்
நற்குணமும் அறிவும்தர்மம் சேர்ந்துசத்யம் ஆனதாம்

17.2
அடுத்தயுகம் இருப்பதோ பன்னிரண்டு லட்சத்து
தொண்ணூற்றா ராயிரம் ஆண்டுகளே ஆகுமாம்
த்ரேதயுகத்தில் தீயகுணங்கள் தலைஎடுத்துத் தோன்றுமாம்

17.3
த்வாபரத்தில் பாபங்களும் பல்கிப்பெருகித் தோன்றுமாம்
எட்டுலட்சம் அறுபத்து நான்குதன்னின் ஆயிரம்
ஆண்டுகொண்ட இந்தயுகம் சீரழிவின் ஆட்டமாம்

17.4
ஆயிரத்தில் ஐந்துசென்ற கலியுகத்தில் உண்டுமொத்தம்
நாலுலட்சம் ஆயிரம் முப்பத்திரண்டா குமாம்
 
18
ஆயிரத்தில் ஐந்துசென்ற கலியுகத்தில் உண்டுமொத்தம்
நாலுலட்சம் ஆயிரம் முப்பத்திரண் டாகுமாம்
எல்லைமீறும் பாபமாம் தொல்லைஆட்சி செய்யுமாம்
அதனைஅழிக்க தர்மம்செழிக்க கல்கிவடிவம் தோன்றுமாம்

இவ்வாறாக சுமார் 20,05,000 வருடங்களுக்கு முன்பே மனு தனது மாணவனும் மகனுமான இஷ்வாகுவுக்கு இந்த விஞ்ஞானத்தைக் கூறினார். இப்போதைய மனுவின் காலம் 30,53,00,0000 வருடங்கள் நீடிக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது

19
பகலில்பிரமன் படைக்கிறான் இரவில்மறைத்துக் கொள்கிறான்
பகலில்தோன்றும் ஜீவராசி இரவில்தூங்கும் மறைதலாகி

20
பிரமனது நாளில்தோன்றி இரவில் மறையும்
உலகம் வெறும்மாயையே அதனினுமே மேலிருக்கு
இறைவனது லோகமே அதுவேபரம மானது
உன்னதமும் ஆனஅது முதலும்முடிவும் அற்றது

8:21-28
ஆதியந்த மற்றஅதுவே இறுதிநோக்கு மாகுது
அங்குசெல்வோர் மாள்வதில்லை மாயஉலகம் மீள்வதில்லை
அதுவேபரம பதமுமாம் துன்பமற்ற இடமுமாம்
சிறப்புமிக்க பெருமைமிக்க அதுவென்வாசஸ் தலமுமாம்

களங்கமற்ற மனதுகொண்ட பக்திதன்னில் இறங்குவான்
கோதுமற்ற குறையுமற்ற சக்திகொண்ட பரமனாம்
மாயஉலகைக் கடந்திருந்தும் எதிலும்நிறையும் இறைவனாம்
தூய்மையுலவும் அவனிடத்தில் யாவும்எதுவும் இருக்குமாம்
 
இந்தஉலகைப் பிரியும்நேரம் மீண்டும்வருகை சொல்வதாகும்
எந்தநேரம் அந்தநேரம் சித்தியாகும் சித்தம்யாவும்
பந்தபாசம் கொண்டஉலகம் மீண்டும்வரா தென்றுபோகும்
என்பதைநான் சொல்லப்போகும் இந்தபோதம் கேட்கவேண்டும் 
 
பரமனையே அறிந்தசித்தர் இறைவனடி சேரும்பத்தர்
நெருப்புதேவன் ஆதிக்கத்தில் துலங்குகின்ற ஜோதிதன்னில்
மிகவும்நல்ல நேரம்தன்னில் வளர்பிறையின் வாரங்களில்
உலகைவிட்டுப் பிரிகிறார் பிறவியறுத்து எறிகிறார்

No comments:

Post a Comment