Thursday, October 30, 2014

அத்தியாயம் 7- பரமஹம்ஸ விக்ஞான யோகம்







பூரணத்தின் ஞானம்
7:1-10
எனதுஉணர்வில் என்னிடம் பற்றுகொண்ட மனத்துடன்
யோகம்தன்னைப் பயில்வதால் ஐயமின்றி முழுமையாய்
என்னைஅடைதல் எப்படி என்பதைநான் தெளிவுமாய்
சொல்லுகிறேன் அருச்சுனா கேட்டிடுவாய் கவனமாய்

எதனை அறிந்தபின் அறிவதொன் றில்லையோ
அத்தகு அறிவினை முழுமையாய்ச் சொல்கிறேன்

Spiritual progress 7:3
ஆயிரம் ஆயிரம் மாந்தரில் பக்குவம்
ஆயிடும் முயற்சியை ஒருவனே கொள்ளலாம்
அவ்விதம் பக்குவம் அடைந்தவர் தன்னிலும்
என்பதம் கண்டவன் ஒருவனைக் காண்பது
அரிதிலும் அறிதுமாம் அருமையில் அருமையாம்

நிலத்தோடு நீராகாயம் நெருப்போடு காற்றும்மனமும்
அறிவோடு பொய்யின்தன் உணர்வும் ஆனவிவ்
வெட்டுமே என்னிடம்பிரிந்தவை ஜட சக்தியாய்த்தெரிந்தவை
இந்தநிலை அருச்சுனா இயற்கைதனக்குப் புறமுமாம்
ஜடவியற்கை தன்னுடன் கணமும்ஆட்டம் ஆடுமாம்
அண்டம்தன்னைத் தாங்குமெந்தன் சக்தியான உயிர்களும்

இவ்வுலகில் ஜடமுமாய் மற்றும்குறைசே தனமுமாய்
இருக்கும்யாவி னுக்கும்நான் ஆதியந்தம் ஆகிறேன்

என்னிலுயர் உண்மைஇல்லை நானிலாது வேறுமில்லை
நூலிலாடும் முத்துமாய் என்னிலாடும் யாவையும்

நீரின் சுவைநானே சூரிய ஒளிநானே
சந்திரக் குளிர்வேத மந்திர ஓம்நானே

வானுறை ஒலிநானே மானிடன் வலிவானேன்
பூமியின் மணம்நானே நெருப்பினில் சூடானேன்
உயிரினுள் உயிர்நானே தவத்தினுள் தவம்நானே

வாழ்வினில் விதையும்நல்ல அறிஞரின் ஞானமானேன்
உடலுரம் உள்ளோருள்ளே உறைகின்ற உரமும் நானே

7:11-20
*மறவர்கொண்ட பற்றும் நான்
புலன்படாப் பலமும் நான்
அறம்கெடாச் சுகமும் நான்
அறிந்திடாய் அருச்சுனா
* பலவான்கள்

சத்வரஜஸ் தமஸைநான் தோற்றிஅதனை ஆள்பவன்
ஆயினும் அவற்றினில் சிக்கிடாத சுதந்திரன்

இந்தமூன்று குணங்களும் உலகம்தன்னைக் கொண்டதால்
குணத்திற்ர்க்கப்பால் எல்லையொன் றில்லாநிற்கும் என்னையே
உலகம்அறிதல் அரியது அரிதுபுரிந்து கொள்வது

எனதுசக்தி வெல்லுதற் கரிதுபெரிது அரியது
எனினுமென்னைப் புகலுற கடக்க மிகவும் எளியது
15
அறிவிலா மூடரும் கடைநிலை மனிதரும்
மாயைசார்ந் திருப்பரும் நாத்திகத் தசுரரும்
ஆனவிந் நால்வரும் கீழ்நிலை மாந்தரே
என்சரண் வந்திடார் என்பதம் கொண்டிலார்

நல்லோரில் நால்வகை வேண்டுவர் என்துணை
துயரத்தில் வாடுவோர் செல்வத்தை வேண்டுவோர்
ஐயத்தில் வாடுவோர் மெய்யைத்தான் தேடுவோர்
இவ்வகை மாந்தர்கள் என்சரண் வேண்டுவர்

இவர்களுள் சிறந்தவன் தூயபக்தித் தொண்டினால்
என்னில்இணையும் யோகியே என்னைஅடையும் ஞானியே
அவனுக்குநான் உரியவன் எனக்குமவன் உரியவன்
ஒருத்தருக்கு அடுத்தவர் அன்புகொண்ட ஒருத்தராம்

இந்தபக்தர் யாவரும் ஐயமறச் சிறந்தவர்
எனினும்என்னில் நிலைப்பவன் என்னைப்பற்றி இருப்பவன்
என்னையன்றி வேறுக்காக என்னையண்டாப் பெருமகன்
என்னிலவன் வாழ்கிறான் என்நினைவே கொள்கிறான்
அன்புமனச் சேவைசெய்து என்னைவந்து சேர்கிறான்
அனைத்தின் மூலமானவன் காரணத்தின் காரணன்
என்றெனை அறிந்தநல் அறிவுவந்த ஞானவான்
அளவிறந்த பல்பிறப் பறுத்துவந்து என்கழல்
பொருந்துகின்ற யோகியைக் கான்பதரிதின் அரிதுமாம்

மாயஉலக ஆசையால் அலையும்மனதின் மாந்தர்கள்
தேவர்களை நாடுவர் பூசைசெய்து போற்றுவர்
தனது இயல்பு சார்ந்த வோர்
முறையில்வழி பாட்டினைச் செய்துவாழ்க்கை நடத்துவர்

7:21-24
அனைத்துநெஞ்சில் உறையும்பர மாத்துமமும் நானடா
தேவர்வழி பாட்டைமாந்தர் விழையும்போது நம்பிக்கையைத்
தந்துஅருளு வேனடா வழியும்காட்டு வேனடா

தேவதைகள் தன்னைநாடி ஆசைகளின் பூர்த்திதேடி
பலனடைந்த போதிலும் நன்மைகண்ட போதிலும்
அந்தபழங்கள் யாவையும் கொண்டநன்மை யாவையும்
அளித்தஒருவன் நானடா மனிதன்வைத்த நூறுபேரில்
அனைத்தினுள்ளும் ஆத்துமமாய் இருக்கும்இறைவன் நானடா

தேவர்பூஜை தரும்பலன் கொண்டதாகும் வரையறை
அன்புசேவை தன்னிலே என்னைநாடும் யோகியோ
மூப்புசாவை வென்றுபின் சேர்வதெந்தன் நெஞ்சறை

என்னை அறியாதார் ஒன்றும் அறியாதார்
என்னை ஊன்என்பார் மனிதன் தான்என்பார்
என்னை நான்கொண்ட உருவம் தான்என்பார்
என்னை அழியாத உயர்வாய் அறியாதார்
சிறுமதி அறிவாவார் என்னை அறியாதார்
என்அதி சக்தியினால் என்னை மறைக்கின்றேன்
இவ்வதி சயம்தன்னை மதியின் மயக்கத்தால்
துளியும் அறியாரே உலகத் துள்ளோரே

நடந்தது நடப்பது நடக்கப்போவ தாவது
உலகஜீவ ராசிகள் அனைத்தையும்-நான்அறிகிறேன்
துளியும்என்னை ஒருவரும் அறிந்திடவே இயன்றிடார்

அனைத்துஜீவ ஆன்மமும் விருப்புவெறுப்பு வினையினால்
மயங்கிஉலகில் வாழ்கிறார் ஆதலினால் பிறக்கிறார்

சென்றபிறவி யாவிலும் இந்தபிறவி தன்னிலும்
சேவைசெய்து வாழ்ந்தவர் பாவமூட்டை தொலைத்தவர்
விருப்புவெறுப்பு என்னும்இருமை இருளைத்தாண்டி இருப்பவர்
அவர்க்குஎன்னைத் தெரியுது சேவைபுரியப் புரியுது

மூப்பிறப் பிரண்டையும் அறுத்திருக்க எண்ணிடும்
சான்றோரெந்தன் புகலினை சேவைதன்னில் நாடுவர்
தர்மம் கொண்டு ஆன்மம் கண்டு
ஞானம்வந்து இருப்பவர் பிரமம்என்றே ஆனவர்

என்னைப்பரம புருஷனாய் ஜடத் தோற்றம்ஆளும் தத்வமாய்
தேவர்தன்னின் தனைவனாய் யாகங்களின் இறைவனாய்
உறுதியான மனத்துடன் அறியும்மாந்தர் யாருமே
இறக்குமந்தக் கணத்திலும் என்னைஅறியும் யோகியே

_____________


No comments:

Post a Comment