Wednesday, October 29, 2014

அத்தியாயம் 6 - த்யான அப்யாஸ யோகம்





அப்யாஸ யோகம்
6:1-10
செயலின்பலனில் பற்றுதுறந்து கடமைஉணர்வு நெஞ்சில்கொண்டு
செயல்புரிதல் துறவுமாம் செயல்புரிவோன் துறவியாம்
செயல்துறந்து சேவைமறந்து வேள்வித்தீயை ஏற்றல்துறந்து
இருக்கும்ஒருவன் துறவியே அல்லஅறி அருச்சுனா
துறவுஎன்று சொல்வது யோகம்போன்று தானது
அறவும்இச்சை இன்றியே பரத்தில்இணைதல் ஆகுமே
கருத்தில்பலனின் இச்சையைக் கொண்டுசெயலைப்  புரிந்திடும்
ஒருத்தன்தன்னைத் துறவியாய் கொள்வதில்லை அருச்சுனா
*அட்டவங்க யோகம்தன்னில்  புதியசீடன் தனக்குமே
செயல்புரிதல் என்பது வழிமுறையாய் விளங்குது
யோகம்தேர்ந்த சாதகர் யோகியான உத்தமர்
தனக்கும்துறத்தல் என்பது ஜடச்செயல்கள் மட்டுமே

*அஷ்டாங்க யோகம்

மனதுஒருவன் நண்பனாம் அதுவேஅவனின் எதிரியாம்
மனதைவென்று மேம்பட நண்பனாக ஆகுது
அதனின்போக்கில் சென்றிட புலனின்நுகர்வு சேற்றினில்
அமிழ்த்திச்சிறுமை செய்யுது எதிரியாக மாறுது 
மனதைவென்ற ஒருவனாம் நிலையில்நின்ற இறைவனாம்
அவனுக்கின்ப துன்பமும் குளிரும்சுடும் வெப்பமும்
மானமவ மானமும் வேறுவேறு அல்லவாம்
யாதுமொன்று என்பவன் யாதுமாகி நிற்பவன்
பெற்றுணர்ந்த ஞானத்தால் முழுநிறைவு கொண்டவன்
யோகியாகத் திகழ்பவன் தன்னுணர்வில் திளைப்பவன்
அந்தஉன்ன தத்திலே நிலைத்திருக்கும் ஞானியே
தன்னடக்கம் கொண்டவன் தன்னில்தன்னைக் காண்பவன்
தங்கப்பாளம் தன்னையும் கல்லின்பாறை தன்னையும்
ஒன்றுமாகக் கொள்பவன் சமத்தில்நிலைக்கும்  சமர்த்தனாம்
பூதஉலகின்ஆசைகள் பலன்கருதும் கருமங்கள்
புலன்நுகர்வு செயல்களும் தன்னைத்துறந்து  இருப்பதே
துறவுஎன்று ஆகுது இறைவன்அடியைக் காட்டுது
இந்ததுறவு கொண்டவன் யோகம்கொண்டு வாழ்பவன்
நண்பர்எதிரி நல்லோர்தீயோர் பொறுமைகொண்டோர்பொ றாமைகொண்டோர்
நடுநிலையோர் கேடுதரும் வேற்றுமைகள் சிறிதுமற்றோர்
யாவருடனும் சமதைகொண்டு நேர்மைகொண்டு நலனைநாடி
 வாழுபவன் யோகியேமுன் னேற்றம்கொண்ட பிறவியே

சிறந்தயோகி என்பவன் மனத்தைஅடக்கப் பழகணும்
தனியிடத்தில் வாழணும் இறையுணர்வு பூணனும்
உரிமைஉணர்வு போக்கணும் ஆசைகொன்று சமனில்நின்று
இடைவிடாது இறைவன்மீது மனதைச்செலுத்தப் பழகணும்
Yogam : 6:11-15
தனிஇடத்தைச் சேர்ந்து-நிலத்தில் தர்ப்பை-பரப்பி அதனின்மேலே
மானின்-தோலால் நன்குமூடி மெல்லியதோர் துணிவிரித்து
உயர்ந்துமற்றும் தாழ்ந்திலாதோர் ஆசனத்தைப் புனிதம்சேர்ந்த
இடத்தைக்கண்டு அமைத்துப்பின்பு மனதைஅடக்கிப் புலனைஅடக்கி
 இதயம்தன்னைத் தூய்மைப்படுத்தி ஒருமுகத்தில் மனதைச்செலுத்தி
இறைவன்நினைவைக் கொள்ளணும் யோகம்தன்னைப் பயிலணும் 
உடல்தலை கழுத்துமூன்றை ஒருசீராய் நேரில்வைத்து
நிமிர்ந்துஅமர்ந்து நாசிநுனியில் பர்வைதன்னை நிறுத்திப்பின்பு
கிளர்ச்சியற்ற அடக்கமுற்ற மனத்தைக்கொண்டு பயத்தைவென்று
சிறியஇன்ப வேட்கையின்று முழுதும்விலகி என்னைஎண்ணி
என்னைமட்டும் லட்சியம் என்றுமாவான் யோகியாம்
உடல்மனம் செயல்கள்மூன்றின் கட்டுப்பாட்டைப் பயின்றுயோகி
ஜடத்தில்வாழும் நிலையைக்கடந்து இறைவன்நாடாம் ஆன்மஉலகம்
தன்னைச்சென்று அடைகிறான் மாயைவென்று உறைகிறான்
6:16-30
உண்ணும் உணவும் கொள்ளும் துயிலும்
மிகுந்துமோ குறைந்துமோ உள்ளஒருவன் யோகியாய்
ஆவதென்ப தரிதென உணர்ந்து கொள்நீ அருச்சுனா
இவற்றில்மிதத்தைக் கொண்டவன் யோகம்கொள்ள உகந்தவன்

இடைவிடாமல் செய்திடும் யோகசாத னையினால்
மனதின்இயக்கம் தன்னைஓர் கட்டுப்பாட்டில் வைத்துப்பின்
உன்னதம்த..னில்-நிலைத்து பௌதிகத்தின் ஆசைகொன்று
நிற்கும்-ஒருவன் யோகியாய்ப்  பற்றிலானைப் பற்றுவான்
காற்றிலாத இடத்தில்ஜோதி அசைந்திடா தொளிர்தல்போல
பற்றிலாத யோகிதானும் மனத்தடக்கிப் புலனடக்கி
உன்னதமாய் உள்ளுறை ஆன்மம்தன்னின் த்யானத்தில்
நிலைத்து நிற்றலாகிறான் அற்புதம்தான் காண்கிறான்
பக்குவத்தின் இந்நிலை-ச..மாதிஎன்னும் ஆழ்நிலை
சிக்கவைக்கும் புலன்விசை இயக்கம்விட்டப் புதுநிலை
தூய்மைகொண்ட மனநிலை அளிக்குமிந்தப் பெருநிலை
கொண்டயோகி தனக்கிலை துன்பமென்ற கடல்அலை
நிலைகுலைந் திடாதமைந்..திடும்சிறந்த உறுதியில்
பிறந்திடும்நம்..பிக்கையில் நிலைத்தயோகப் பயிற்சியில்
பொய்யின்அகங் காரம்தோன்றும் ஆசையாவும் விலக்கிமேலும்
புலனடக்கம் கொள்ளவேண்டும் ஆன்மம்தன்னில் நிலைக்கவேண்டும்

எங்குஎதிலே செல்லுது மனதுகிடந்து அலையுது
அங்குஅதிலே சென்றுநீ மனதைத்திருப்பி இழுத்திடு
தங்குமாறு ஓரிடம் தன்னிலதனை நிறுத்திடு
மங்கிடாத ஒளியின்ஆன்மக் கட்டிலதை வைத்திரு
என்னில்மனதை நிறுத்திய யோகிஇன்பம் கொள்கிறான்
தன்னைப்பரம பதத்தினில் கண்டுமுக்தி பெறுகிறான்
என்னவென்று சொல்லிடா அமைதியவனைச் சேருது
மின்னலென்று தோன்றும்எழுச்சி தணிந்துபாவம் தொலையுது

ஜடத்தினின்று விலகணும் பார்த்தா களங்கம் களையணும் 
ஆன்மம்தன்னில் நிலைக்கணும் பார்த்தா-பரம உணர்வெனும்
இன்ப-எல்லை காணவும் பார்த்தா-துன்பம் ஓடவும்
பரமன் அணுக்கம் கூடவும்  பேரானந்தம்  கூடிடும்

யோகியான உத்தமன் உலகின்உயிரை என்னிலும்
என்னைஎல்லா உயிரிலும் காணும்திறமை கொள்கிறான்
உண்மையான தன்னுணர்வு தன்னைத்தானும் கொள்கிறான் 
எங்கும்நான் எதிலும்நான் என்றுஎன்னைக் காண்கிறான்

How not to loose God : 6:30
முன்னர்சொன்ன போலவே திண்ணமாக திட்டமாக
என்னைஎல்லா இடத்திலும் எல்லாம்எந்தன் இடத்திலும்
கண்டுகொள்ளும் யோகிஎன்னை இழப்பதென்ப..தில்லையே
விட்டுசென்று நானுமவனை விலகலில்லை இல்லையே  

6:31-35
உயிரினுள் உறைந்திடும் பரமன்நானே என்பதை
உணரும்யோகி என்னையே வணங்கிஎன்னில் நிலைக்கிறான்
உண்மையான தன்னுரு ஆன்மரூபம் என்றுணர்
யோகியானஒருவனே எதிலும் சமத்தைக் காண்கிறான்
அனைத்துயிரும் அருச்சுனா பேதமறக் காண்கிறான்
இன்பதுன்பம் இரண்டையும் ஒன்றெனவே கொள்கிறான்
மதுவைவென்ற மாதவா மனத்தைக்கவரும் ஆதவா
மனதுஅமைதி அற்றது அலையும்தன்மை கொண்டது
அதனைவெல்வ தென்பது சாத்தியமா ஆகுது
ஆதலினால் கண்ணநீ சொன்னயோகம் கடியது
அமைதியற்ற அம்மனம் குழப்பம்நிறையப் பெற்றது
அடக்கம்என்னும் தன்மையை கடுகளவும் அற்றது
சக்திகொண்ட அம்மனம் காற்றைவிட பறக்குது
அதனைஅடக்கும் பணியது கேட்கமட்டும் இனியது
என்று சொன்ன பார்த்தனைக் கண்டு சொன்னான் கண்ணனே 

உண்மைஉண்மை பார்த்தனே மனதைஅடக்கல் கடினமே
அமைதியற்ற அதனைஅடக்க முயற்சிமிகவும் வேண்டுமே
இடைவிடாத பயிற்சியும் பற்றிலாத முயற்சியும்
கொண்டஎவனும் செய்யலாம் மனதைஅடிமை ஆக்கலாம்
6:36-40
அடங்கிடா மனம் கணம்பறந் திடும்
புலப்படா ததும் உணர்வெனும் நிஜம்
முடங்கிடா தினம் தினம்முயன்.. றிடும்
சிறந்தசா தகன் இடம்வரும் ஜெயம்
நன்றுநன்று கண்ணனே சொல்லிடுகார் வண்ணனே
இன்றுயோகம் செய்தவன் சென்றுஅதனைச் செய்திடாமல்
கொன்றுதின்னும் மாயஉலகம் சேட்டையாலே தொடர்ந்திடாமல்
நின்றுபோகும் சாதகன் தன்னின்நிலைமை என்னது
கண்ணாஆன்மப் பாதையை விட்டுப்பிரிந்த சாதகன்
கன்னாபின்னா என்றுமே சிதறிப் போவதில்லையா
இதுவேஎந்தன் ஐயமே தீர்த்திடுமை வண்ணனே
உன்னையன்றி இதனையே தீர்ப்பதுயார் ஐயனே
என்று சொன்ன பார்த்தனைக் கண்டு சொன்னான் கண்ணனே 

செயலில்நன்மை செய்பவன் என்றும்இங்கும் பரத்திலும்
அழிவையடைவ தில்லையே தீமையவனுக் கில்லையே

Born Rich Continuity of Yoga 6:41-47
இந்தப்பிறவி தன்னிலே யோகம்முடிவு அற்றவன்
நல்லோர்வாழும் உலகிலே நன்குஇன்பம் துய்க்கிறான்
பின்புஉலகம் தன்னிலே செல்வந்தரின் வீட்டிலோ
நல்லோர்களின் இல்லிலோ நல்லபிறவி கொள்கிறான்
அன்றிஅந்த சாதகன் அறிவுசால் ஆன்மஉணர்வு
கொண்டசான்றோர் இல்லத்தில் நற்பிறவி கொள்கிறான்
பின்புமுன்னர் பிறவியில் செய்தயோக முயற்சியை
இந்தப்பிறவி தன்னிலே தொடர்ந்து செய்கலாகிறான்
முற்பிறவி தன்னின்தெய்வ உணர்வுதந்த உந்தலால்
யோகம்தன்னின் கொள்கையில் ஈர்ப்புகொண்டு முயல்கிறான்
இந்தயோக ஆர்வலன் சாத்திரத்தின் சடங்குகள்
தன்னைக்கடந்து நிற்கிறான் ஆன்மஉணர்வு கொள்கிறான்
யோகசாத னைகளில் முனைந்துமுன்னில் செல்லவே
உண்மையாக முயற்சியைக் கொள்ளும்யோகி யானவன்
மாயத்தளை மீண்டுபின் நீண்டசாத கத்தினால்
தூய்மைநன்கு பெற்றுப்பின் இலக்குசென்று அடைகிறான்

பலனைக்கருதி முயல்பவர் உலகஞான அறிஞர்கள்
யாகபூஜை தவங்களைப் புரியும்சிறப்பு கொண்டவர்
யாவரினும் சிறந்தவர் யோகம்புரியும் யோகியாம்
எந்தஒரு நிலையிலும் யோகியாவாய் அருச்சுனா
என்னை நினைப்பவன் என்னையே சார்பவன்
என்னில் நிலைப்பவன் தன்னுணர் பக்தியில்
அன்பைக் கொடுப்பவன் மனம்கனி சேவையால்
என்வழி..படுபவன் யோகியுள் யோகியாம்


No comments:

Post a Comment