Thursday, October 30, 2014

அத்தியாயம் 11- விஸ்வரூப தர்சன யோகம்





விஸ்வரூபம் 

11:1-10
அன்புகொண்டு கண்ணனே சொன்னசொற்கள் தன்னிலே
எனதுமயக்கம் தீர்ந்தது எனதுகண்கள் திறந்தது

அலர்ந்தமலரின் கண்ணனே சகலலோக மன்னனே
உனதுபெருமை மூலமாய் உனதுஅருமை மொழியினால்
உலகுவாழும் உயிர்களின் தோற்றம்மற்றும் மறைவுதன்
விளக்கங்களைக் கேட்டுநல் அறிவுதன்னைப் பெற்றுளேன்

புருஷர்களில் உத்தமா உருவங்களில் உன்னதா
உனதுஉண்மை நிலையினை நன்குகண்டு தெளிகிறேன்
எனினும்இந்த உலகினில் உள்ளயாவின் உள்ளினுள்
எவிதம்நீர் புகுகிரீர் என்றுகாண விழைகிறேன்

உனதுவிஸ்வ ரூபத்தை எனதுஊனக் கண்ணினால்
காணமுடியும் என்றுநீ *எண்ணிடாயில் ஆண்டவா
அனைத்து யோகமானவா அனைத்துஆன்ம உருவினை
எனக்குக்காட்டி உதவுவாய் அன்புடனே அருளுவாய்

குந்திமைந்தா அருச்சுனா கண்டிடுவாய் பாண்டவா
எனதுசிறந்த வைபவம் யாவும்உனக்குக் காட்டுவேன்
கடலின்நிறங்கள் போலவே பலதுமான தெய்விக
உருவம்தன்னைக் கண்டிடு மனதில்தெளிவைக் கொண்டிரு

6
ருத்திரரா தித்யர்கள் மற்றும்எல்லா தேவரும்
ஆன எந்தன் தோற்றம் பார்
இதுவரையில் யாருமே கண்டிராத கேட்டிராத
பல விஷயம் இங்கு பார்

இந்தவிஸ்வ ரூபத்தில் இன்றுஉன் விருப்பமும்
நாளைநடக்கும் விஷயமும் நான்உனக்குக் காட்டுவேன்

8-9
உனதுஇந்தக் கண்களால் எந்தன் விஸ்வரூபத்தைக்
காண்பதென்ப தரியது எனதுயோக வைபவம்
தன்னைக்கண்டு மகிழ்ந்திட தெய்வமகிமை கொண்டநல்
கண்களை நான்தருகிறேன் என்றுசொல்லி மன்னவா
அனைத்துயோக சக்தியின் தலைவனான பரமன்தன்
விஸ்வரூப தரிசனம் தன்னைக்காட்டிமகிழ்த்தினார்
என்றுதிருத ராட்டிரன் தனக்குச்சொன்னான் சஞ்சயன்

10-11
அந்த விஸ்வரூபத்தில் எல்லையற்ற கண்களும்
எண்ணிறந்த வாய்களும் கண்டனன் அருச்சுனன்
அவ்வுருவம் ஒளிரும்நல் வினோதமான நகைகளால்
அலங்கரிப்பில் மிளிர்ந்தது பல்விதமாய் ஆடையும்
கவின்மிகுந்த மாலையும் அலங்கரிக்கப் பட்டுநல்
மணம் மிகுந்த திரவியப் பூச்சுகொண்டு திகழ்ந்தது
ப்ரும்ம அண்டஅண்டமாய் எங்கும்நிறை பூர்ணமாய்
எல்லையில்லா தொன்றுமாய்ப் பார்த்தன்காணக் கிடைத்தது

12-14
ஆயிரத்தின் ஆயிரம் சூரியர்கள் ஜோதிக்கு
இணையுமாகக் கூடுமோ விஸ்வரூபம் என்பது
அகிலமெங்கும் ஆயிரம் ஆயிரத்தின் ஆயிரம்
பகுதியாக இறைவனின் அங்கம்யாவும் ஓரிடம்
தன்னில்-காணும் பாக்கியம் தன்னைப்-பெற்றான் அருச்சுனன்  
தனை-மறந்து அவனுமே வியப்பும்-நெஞ்சக் குழப்பமும்
கொண்டு-கையைக் கூப்பியே கண்டமயிர்க் கூச்சலில்
பேசலுற்றல் ஆயினான் பின்வருதல் போலவே

15
கண்ணா பரந்தாமா எங்கும்நிறை பரமா
அனைத்துஉயிர் இனங்களும் சிறந்ததேவர் இனங்களும்
அணிவகுத்து நிற்பதை கண்களாலே காண்கிறேன்
தாமரைநான் முகனையும்  இமயப்பரம சிவனையும்
பலவிரைமுனி ஜனத்தையும் தெய்வ நாகஇனத்தையும்
உனதுஉடலில் காண்கிறேன் எனதுநிலையை மறக்கிறேன் 

16-20
உனதுபரந்த உடலிலே நிறைந்தஉருவம் பலதைநான்
பெரிய வாய்கண் வயிறுடன் எல்லையற்றுவிரிவதாய்
இருக்கநானும் காண்கிறேன் வியப்புமிகக் கொள்கிறேன்
அவைகள்ஆதி அந்தமோ இடைப்பகுதி என்றுமோ
கொண்டிராமல் இருப்பதைக் கண்டுகண்டு வியக்கிறேன்

சிறந்தபல மகுடமும் அழகியகதை சக்ரமும்
கொண்டஅலங் காரமும் உனதுஉருவில் காண்கிறேன்
ஆதவன்போல் ஒளிருது அளவிலாமல் ஜொலிக்குது
அதனொளியில் கண்களும் கூசிமயக்கம் கொள்ளுது

நீரே பரம முக்கியம் யாவினுள்ளும் உத்தமம்
எல்லையொன்று அற்றவர் தொன்மைகொண்ட நல்லவர்
அறத்தைக் காக்கும் சிறப்புநீர் அழிவுமற்ற பிறப்புநீர்
ஆரம்பமும் நடுவும்பின் முடிவும்அற்ற மூலம்-நீர்
வரம்பிலாத கண்மலர் தன்னில்சூர்ய சந்திரர்
ஸ்வயம்பிரகாச மானநீர் அகிலம்தாங்கும் மூலம்நீர் 

புறவெளியில் பரந்தநீரே கிரகம்தன்னில் இருக்கிறீர்
பயங்கரத்தின் உருவம்தாங்கி நிற்கும்உம்மைக்  காண்கையில்
குழப்பம் மற்றும் பயத்தைநான் கொண்டுவியப்பில் மருள்கிறேன்

21
வான..வர்கள்யாவரும் சரணடைந்து உம்மிடம்
புகுந்துகொண்டு உள்ளனர் அச்சம்கொண்டு கூப்பிய
கரங்களோடு வேதமந்.. திரங்கள்தன்னை ஓதியே
கானம் செய்யுகின்றனர்  பவ்யமாகத் தோன்றியே

22-24
சிவனின் பல தோற்றமும் ஆதித்யரும் வசுக்களும்
சாத்தியரும் விஸ்வதேவ அஸ்வினிகு மாரரும்
மருத்துகளும் முன்னோரும் அசுரயக்ஷகந்...தருவரும்
சித்தரான தேவரும் வியப்பில் உம்மைக் கண்டுளர் 

25
உலகங்களின் புகலிடம் ஆன இறையின் இறைவனே
கருணைதன்னை என்னிடம் கொண்டருளும் தேவனே
மரணம்போன்று எரிகிற உமதுபல முகங்களை
அதனில்உடைய பற்களை கண்டபின்என் மனநிலை
நிற்கவில்லை ஒருநிலை முயன்றும் என்னால் முடியலை

26-28
திருதராஷ்ட்ரர் புதல்வரும் பீஷ்மத்ரோண கர்ணரும்
உமதுவாயில் புகுகிறார் தலைகள் பொடிக்கப் படுகிறார்
வேறுபல மாந்தரோ பல்லில் அரைப்டுகிறார்
விரையும்நதிகள் கடலிலே புகுவதுபோல் இவர்களும்
கொதிக்கும் உந்தன் வாய்களில் நுழைந்து அழிந்து போகிறார்

29-30
திருதராஷ்ட்ரர் புதல்வரும் பீஷ்மத்ரோண கர்ணரும்
உமதுவாயில் புகுகிறார் தலைகள் பொடிக்கப் படுகிறார்
வேறுபல மாந்தரோ பல்லில் அரைப்டுகிறார்
விரையும்நதிகள் கடலிலே புகுவதுபோல் இவர்களும்
கொதிக்கும் உந்தன் வாய்களில் நுழைந்து அழிந்து போகிறார்
நெருப்புள்போகும் விட்டிலாய் நுழைந்துஉமது வாயினுள்
இந்தமக்கள் யாவரும் செல்வதைநான் காண்கிறேன்

உமதுவாய்கள் பலதினால் மக்களெல்லாம் அழிவதும்
அளக்கவொண்ணா கதிர்களால் அகிலம்நிறைந்து இருப்பதும்
கண்டுநானும் வியக்கிறேன் பயமும்மிகவும் கொள்கிறேன்

31
பயங்கரத்தின் உருவமே அறியஅரிய இறைவனே
தயவு கூர்ந்து என்னிடம் யார்நீ என்று கூறிடும்
நமஸ்கரித்துக் கேட்கிறேன் மிகச்சிறிய என்னிடம்
கருணைகொண்ட தெய்வமே உமதுநோக்கம் யாதென
அறிந்திடாமல் தவிக்கிறேன் அறியநானும் விழைகிறேன் 

32
இறைவன்சொன்ன பதிலது கீழேசொல்லப் படுகுது
காலதேவன் நானடா உலகைஅழிக்கும் ஊழிநான்
சம்ஹரிக்கும் ஒருவனாய் வந்ததாக என்னைநீ
அறிந்துகொள்ளு வாயடா  பாண்ட வர்கள்தவிரஇங்கு
எஞ்சிநிற்ப தாரடா அழிந்துமாள்வர் நிஜமடா

No comments:

Post a Comment