Thursday, October 30, 2014

அத்தியாயம் 10- விபூதி விஸ்தார யோகம்





பூரணத்தின் வைபவம் 
10:1-10
உந்தன்மனதில் ஆனந்தம் கொண்டுநன்மை அடைந்திடும்
வண்ணம்நானும் சொல்லிடும் இந்தஉண்மை உரையினை
கவனம்கொண்டு கேட்டிடு மிகவும்நன்று அறிந்திடு

வானிலுறை தேவரோ மண்ணிலுயர் முனிவரோ
என்னுடைய மகிமையை அறிவதில்லை ஏனெனில்
எந்தவிதத்தில் ஆயினும் அவர்களுக்கு முன்னரே
ஆதியான பூரணன் நானேஉலகின் காரணன்

அனைத்துலகின் இறைவனாய் ஆதியான ஒருவனாய்
என்னைநன்கு அறிபவன் உலகில்உள்ள மாந்தரில்
தெளிந்தநல்ல மானிடன் ஒளிபிறந்த ஒர்மகன்
தொடருகின்ற பவபயம் அறுந்தசித்தப் பெருமகன்
4,5
பக்திஅறிவு வருதலும் ஐயம்மயக்கம் களைதலும்
பொறுத்தல்உண்மை கொண்டுஇருத்தல் மேன்மைகொண்ட அறத்தில்இருத்தல் புலனைவிடுத்தல்
ஆனஇவையும் இன்பதுன்ப பிறப்புஇறப்பு
பயமும்அமைதி அவைகள்இன்மையும் அஹிம்சையோடு சமத்தின்நோக்கு
திருப்திதானம் தவமும்புகழ்ச்சி இகழ்ச்சிஆன இவைகள்யாவும்
என்னில் தோன்றும் எனக்குள் அடக்கம்
சப்தரிஷியும் அவர்க்குமுன்னர் வந்தநான்கு முனிபுங் கவரும்
மனுவும்எந்தன் மனத்தினின்று தோற்றம்கொண்ட பிறவியே
பிறகுவந்த உயிர்கள்யாவும் இவரினின்று வந்ததே
பரமபுருஷன் ஹிரண்யகர்ப்பம் பிரமன்உதித்த சிறந்தகர்ப்பம்
சனகசனந்த சனாதர் சனத்குமாரர் நால்வரும்
பிரமன்படைத்த முனிவராம் அதன்பிறகு தோன்றினர்
ருத்ரர்சப்த ரிஷிகளும் அந்தணர்ஷத் ரியர்களும்

எனதுஇந்த புகழையும் அருமைபெருமை தன்னையும்
அறியும்எந்த ஒருவனும் புரியும்அன்புத் தொண்டினில்
தூயமனதைப் பெறுகிறார் வாய்மைகண்டு உய்கிறார்
ஐயமின்றிசத்திய வாக்கு இதனைக் கொள்ளுவாய்

ஜடஉலகம் மற்றும்சூக்ஷ்ம ஆன்மஉலகம் இரண்டையும்
படைத்தஆதி மூலம்நான் கிடைத்திடாத ஜோதிநான்
இதனைஉணர்ந்த மானிடர் எமனைவென்ற ஞானிகள்
அன்புச்சேவை செய்கிறார் அதனில்என்னைக் காண்கிறார்
Sathsangam Sath chinthai: 10:9-10
எனதுதூய்மை பக்தரின் சிந்தனைகள் முழுவதும்
என்னைக்கொண்டு நல்விதம் என்னிடமே ஆழ்கிறார்
என்னைப்பற்றி பேசுவார் என்னைஉப தேசம்செய்து
திருப்திமகிழ்வு கொள்ளுவார் ஆனந்தமாய் வாழுவார்

எப்பொழுதும் என்னிடம் பக்திசெய்து அன்புடன்
வழிபடுகிற மாந்தர்க்கு என்னிடத்தில் வந்தடையும்
வழியைநானும் அளிக்கிறேன் என்னில்அவரைச் சேர்க்கிறேன்

10:11-20
அவரிடம் இருக்குமறி யாமைஇருளை நீக்கிட
அருள்புரிந்து ஞானஒளி தன்னை நானும் அளிக்கிறேன்

ஆயர்குலக் கண்ணனே மாயம்விளக்கும் மாயனே
எங்கும்நிறை ப்ரம்மம்நீ என்றும்உறை தத்வம்நீ
சென்றடையப் புகலும்நீ தூய்மைகொண்ட புகழும்நீ
12-13
பூர்ணசத்ய ரூபம்நீ நித்யதெய்வ புருஷம்நீ
ஆதிதேவ புருஷனே எங்கும்நிறை அழகுநீ
உன்புகழை நாரதர் அசிதர்தேவர் வ்யாசராம்
ஆனபெரும் முனிவர்கள் உரைத்துமகிழ்ச்சி கொள்கிறார்
அதனைஇன்று எனக்குநீ எடுத்துஉரை செய்கின்றாய்

எனக்குநீ உரைத்ததை உண்மைஎன்று ஏற்கிறேன்
தேவர்மற்றும் அசுரர்கள் உன்னைஅறிதல் இல்லையே

அகிலம்தன்னின் ஆண்டவா பரமபுருஷ மாதவா
தேவர்போற்றும் தேவனே எல்லோருக்கும் இறைவனே
உண்மைகிமை ஒன்றினால் நீயேஉன்னை அறிகிறாய்

எந்ததெய்வ சக்தியால் அண்டம்முழுதும் நிறைகிறாய்
என்றவிவரம் சொல்லுவாய் எந்தன்ஆர்வம் காணுவாய்
17
எவ்விதமாய் உன்னைநான் த்யானம்செய்ய வேண்டுமாம்
எவ்வுருவில் உன்னைநான் நினைவுகொள்ள வேண்டுமாம்

மனம்கவர் ஜனார்தனா சிறந்தஉந்தன் சக்தியும்
வளர்ந்திருக்கும் புகழையும் மீண்டும்மீண்டும் கூறுவாய்
அமுதம் போன்ற உனது சொல் கேட்கக்கேட்க யாண்டுமே
எனதுசிந்தை வேண்டுதே சோர்விலாமல் ஏங்குதே

எனதுதெய்வத் தோற்றங்கள் பற்றிஉனக்குச் சொல்கிறேன்
எனதுவைபவங்களோ எல்லையற்ற தாகுமே
அவைகளுள்ளே முக்கிய மானசிலதைச் சொல்கிறேன்
இமைப்பொழுதும் மயங்கிடாமல் கவனம்கொண்டு கேட்டிடு

அனைத்துயிரின் இதயக்கமலம் தன்னில்உள்ள ஆத்துமம்
அனைத்துயிரின் தோற்றமும் நடுவுமந்த மானவன்

10:21-30
ஆ தித்யரில்நான் விட்டுணு ஒளியில்சந்த்ர சூரியர்
மருந்துக்கடவுள் மரீசிநான் விண்ணின் மீனில் சந்திரன்

வேதத்திலே சாமம்நான் இந்த்ரன்தேவர் கோனும்நான்
புலனில்மனமும் நானறி உயிரில்உயிரும் ஆனவன்

ருத்திரரில் சிவனுமாகி யக்ஷரில்கு பேரன்நான்
வசுவில்நெருப்பு நானடா சிகரமேரு மேயடா

குருவில்தலைவன் ப்ரஹஸ்பதி உணர்வை மலர்த்தும் என்-மதி
படைகள் நடத்தும் தளபதி தன்னில் முருக பூபதி
நீர்நிலைகள் தன்னில்நான் சமுத்திரமாய் ஆனவன்

பெரியமுனியில் ப்ருகுவடா துரிய ஒலிஓம் நானடா
நாமம்ஜபித்துச் செய்யும்நல்ல யாகஜபமும் நானடா
அசைந்திடாத பொருள்கள்தன்னில் அயர்ந்திடாமல் உயர்ந்துநிற்கும்
இமாசலமும் நானடா இன்னும்சொல்வேன் கேளடா

26
மரத்தில் ஆழமானவன் தேவமுனிவன் நாரதன்
தேவகானம் செய்யுபவரில் சிறந்தசித்ர ரதனும்நான்
சித்தர்களில் சிறந்தவர் முற்றுமுணர்ந்த கபிலன் நான்

புரவிஉச்சைஸ் ரவனும்நான் ஐராவத யானைநான்
**மனிதரில்மா மன்னன்நான் புனிதரில்ஓர் புனிதன்நான்

(** பார்புகழ் பாரதம் தோன்றிடும்  தெய்வம்நீ.. 
ஓர் இணை இல்லாத திறத்திலே மன்னன் நீ
பாரினில் நீர்தந்து காத்திடும் மேகம்நீ  .. தாகம் தீர்த்தாயே ..!)

ஆயு..தத்தில் வஜ்ரம்நான் பசுவில்காம தேனுநான்
மனதைமயக்கி இனத்தைப்பெருக்க்கும் அழகுக்கழகு மதனும்நான்
கணத்தில் படத்தைத் தூக்கிகாட்டி ஆடிக்காட்டும் வாசுகி

தெய்வபலம் கொண்டசர்ப்பம் அனந்தன்எந்தன் வடிவமே
நீரைப்பொழிந்துப் பூமிசெழிக்க வைக்கும் வருண தேவன்நான்
முன்னோர்களில் சிறந்தவன் அவரில்என்பேர் அர்யமா
எந்த நாளும் நீதியில் நிலைத்த-யமனும் நானடா

பக்திப்ரக லாதன்நான் ஆளும்கால தேவன்நான்
மிருகங்களில் சிம்மம்நான் பறவைகளில் கருடன்நான்
10-31-35
தூய்மைப்படுத்தும் காற்றுநான் வில்லின்வீர ராமன்நான்
மீனில்மகர மீனும்நான் பாயும்நதியில் கங்கைநான்

படைப்பில்ஆதி அந்தம்நான் நடுவில்நிற்கும் சமமும்நான்
ஞான-மா விக் ஞானம்நான்
வாத முடிவின் உண்மை நான்

எழுத்திலகரம் ஆனவன் கலந்தஇருசொல் ஆனவன்
காலதேவன்எ ன்னுரு நான்குதிசையில் என் தெரு
அதனில்-முகத்தைக் கொண்ட-படைப்புக்
கடவுள்-பிரம தேவன் நான் 

அண்டம்படைத்து எல்லாமும்ஆனவன்
அதனைஅழிக்கும் சாவேநான் ஆனவன்
பெண்கள்  புகழும் ஆனவன்
நல்லதி..ருஷ்டமும் ஆனவன்
அழகுப் பேச்சும்நல் ஞாபகசக்தியும்
அறிவும்பொறுமையும்  கற்பும்நான் ஆனவன்
இதனை அறி நீ பார்த்தேனே இன்னும் அறிய சொல்வனே 

மந்திரத் தில்நான் ப்ருஹத் சாமம்
கவிதையில் தினமும் ஓதும்கா யத்ரிநான்
மாதங்களில் நான் மார்கழி யாவேன்
புலர் பருவங்களில்மலர் வசந்தமும் ஆனேன்
10-36-40
ஏ மாற்றும்சூது நானடா தேஜஸ்ஒளி தானடா
தீரச் செயலும் தீரர்களின் வல்லமைநான் ஆகிறேன்

விருஷ்ணிகுலத்தில் வாசுதேவன் பாண்டவரில் பார்த்தனானேன்
முனிவர்வேத வியாசர்நானே சிந்தனைக்கோர் உஷ்நர்நானே

ஞாயம் வழங்கும் செங்கோல் நானே
வெற்றி கிடக்க வழியும் நானே
ரகஸ்யம் காக்கும் மௌனம் நானே
அறிவிற்ச் சிறந்த ஞானம் நானே

அனைத்தும் தோன்ற வித்து நானே
அனைத்தி னுள்ளும் சத்து நானே
அசையும் உயிர் உள்ளும் நான்
அசையா ஜடம் தன்னில் நான்

எனது மகிமை பறந்தது
கேட்க எங்கே முடியுது
அதனில் சிறிய குறிப்புமே
உனக்குச் சொல்லப் பட்டது
10-41-40
அனைத்து அழகுப் படைப்புகள்
வலிமை கொண்ட பொருள்களும்
எனது தேஜஸ் துளியினில்
பிறந்து வந்த தென்றறி

எனது பகுதி ஒன்றினால்
பிரபஞ்சம் புகுந்து காக்கிறேன்

-------

No comments:

Post a Comment